×

முதல் நாளில் பாகுபலியின் வசூல் சாதனையை முறியடித்தது சன் பிக்சர்ஸின் சர்கார்

சென்னை: முதல் நாளில் பாகுபலி-2 படத்தின் வசூல் சாதனையை சன் பிக்சர்ஸின் சர்கார் முறியடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் நாளில் பாகுபலி-2 படத்தின் வசூல் சாதனையை சர்கார் முறியடித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது, ‘முதல் நாளில் பாகுபலி-2 படத்தின் வசூல் சாதனையை சர்கார் முறியடித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே அதிக வசூலை படம் ஈட்டியுள்ளது. இதற்கு நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ் தான் காரணம். சிறந்த படம் கொடுத்த அவர்களுக்கு நன்றி’ என்றார்.

திரைத்துறை  கட்டுரையாளரும் எழுத்தாளருமான தர் பிள்ளை கூறும்போது, ‘சர்கார் படம் முதல் நாளில் சென்னையில் மட்டுமே 2.41 கோடி வசூலித்துள்ளது. இது புதிய சாதனையாகும். இதுவரை எந்த படமும் இந்த சாதனையை புரிந்ததில்லை. முதல் நாளில் தமிழகம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்துள்ளது சர்கார். சன் பிக்சர்ஸுக்கு வாழ்த்துகள்’ என்றார். வினியோகஸ்தரும் சென்னை நகர தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவருமான அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘சர்கார் வசூலால் மிக மிக சந்தோஷத்தில் இருக்கிறேன். வெல்டன் விஜய், சன் பிக்சர்ஸ், முருகதாஸ்’ என தெரிவித்துள்ளார். திரைப்பட விமர்சகர் எல்.எம்.கவுஷிக் டிவிட்டரில் கூறுகையில், ‘கேரளாவில் எந்த படமும் முதல் நாளில் செய்யாத வசூல் சாதனையை சர்கார் செய்துள்ளது. முதல் நாளில் மட்டும் 6.6 கோடி வசூலித்துள்ளது. ஆந்திராவில் விஜய் படங்களிலேயே அதிகமாக ₹3.8 கோடி வசூலித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பிரமாண்ட வசூலை படம் கண்டுள்ளது. சர்கார், வசூலில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது’ என்றார்.

திரைப்பட வர்த்தக ஆய்வாளர் சுமித் கடேல் கூறும்போது, ‘இந்தியாவில் முதல் நாளில் 35 கோடி வசூலித்து சர்கார் சாதித்துள்ளது. இதன் மூலம் ராஜ்குமார் ஹிரானியின் ‘சஞ்சு’ இந்தி பட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது’ என்றார். சினிமா விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான சதீஷ்குமார் கூறுகையில், ‘சர்கார் படம் சென்னையில் மட்டுமல்ல பெங்களூரிலும் வசூலில் சாதித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்திருக்கிறது இந்த படம்’ என்றார். சினிமா ஆய்வாளர் ரமேஷ் பாலா, ‘வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் சர்கார் படம் வசூலில் புதிய சாதனைகள் படைத்திருக்கிறது. விஜய் படங்களிலேயே அதிக வசூலை முதல் நாளில் குவித்த படம் இதுதான்’ என்றார். விமர்சகரும் திரைத்துறை வர்த்தக ஆய்வாளருமான தரண் ஆதர்ஷ், ‘்அமெரிக்காவில் 2.31 கோடி, ஆஸ்திரேலியாவில் 1.16 கோடி, இங்கிலாந்தில் 1.17 கோடி என முதல் நாளில் சர்கார் வசூல் சாதனை படைத்துள்ளது. வார இறுதியில் வெளியாகாமல், வேலை நாளில் (செவ்வாய்க்கிழமை) வெளியான ஒரு படம் இதுபோல் முதல் நாளில் வசூலிப்பது இதுவே முதல்முறை. பிரான்சில் ஹாலிவுட், ஐரோப்பா படங்களுக்கு கூட இல்லாத வகையில் சர்கார் படத்துக்கு தியேட்டர்களில் கூட்டம் இருந்தது. சூப்பர் சர்கார்’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sarkar of Sun Pictures , Sarkar, collection record
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி...